பல கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது

Report Print Thileepan Thileepan in சமூகம்

பல கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரை வவுனியா பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

செட்டிக்குளம், மன்னார், யாழ்ப்பாணம் பகுதிகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட புங்குடுதீவை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையை 06.02.2018 அன்று வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரால் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் கொள்ளையடிக்கப்பட்ட ஒரு தொகை தங்கமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் இந்நபர் யாழ்ப்பாணத்தில் கொள்ளை சம்பவம் ஒன்றிற்காக யாழ் நீதிமன்றில் ஆஜர்படுத்த கொண்டு சென்ற போது தப்பித்து சென்றிருந்ததுடன் யாழ் நீதி மன்றத்தால் குறித்த நபருக்கு எதிராக 07 பிடிவிறாந்துகள் பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தப்பித்து சென்ற நபர் மன்னார், செட்டிக்குளம், கொழும்பு, திருகோணமலை, கிளிநொச்சி பிரதேசங்களில் வாழ்ந்து வந்துள்ள நிலையில் 04 மாதமாக பொலிஸாரின் தீவிர தேடுதலின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இக் கொள்ளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸாரால் மேற்கொள்ளப்படுகின்றது.