முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் சந்திரநேருவின் 13ஆவது நினைவேந்தல் நிகழ்வு

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமனற உறுப்பினர் மாமனிதர் அரியநாயகம் சந்திரநேருவின் 13ஆவது வருட நினைவு நாள் அம்பாறையில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வு இன்று அவரின் திருக்கோவில் நினைவிட சதுக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மாமனிதர் அரியநாயகம் சந்திரநேருவிற்கு ஈகை சுடர் ஏற்றப்பட்டுள்ளது.

மேலும், எல்லோர் மனங்களிலும் வாழும் மன்னவன் இன்றைய அரசியல் சூழ்நிலையில் இரத்த உறவை பல பேர் மறந்து போனாலும், சிலபேராவது நினைவில் கொள்வது அவரின் மேன்மையை நினைவுகொள்ளும் என அவரது மகன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ச.சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.