வவுனியாவில் லஞ்சம் வாங்கிய வன இலாகா அதிகாரி கைது

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா, நெடுங்கேணி பிரிவுக்குட்பட்ட வன இலாகா அதிகாரி லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கொழும்பில் இருந்து வருகை தந்த லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மரம் வெட்டுவதற்கான அனுமதி வழங்குவதற்கு லஞ்சம் பெற்ற நிலையிலேயே வவுனியா, நெடுங்கேணி பிரிவுக்குட்பட்ட வெடிவைத்தகல் பகுதியில் வைத்து வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் வசிக்கும் 36 வயதுடைய வன இலாகா அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையின் பின் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.