வேட்பாளர் ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல்:பொலிஸில் முறைப்பாடு

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு - காத்தான்குடியில் உள்ள வேட்பாளர் ஒருவரின் வீட்டின் மீது கல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காத்தான்குடி நகரசபைக்கு ஹிழுறியா 8ஆம் வட்டாரத்தில் தேசிய மக்கள் கட்சியில் போட்டியிடும் எஸ்.எல்.எம்.ஜிப்ரியின் வீட்டின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேர்தலில் இருந்து பின்வாங்குமாறு கோரி தனது வீட்டில் துண்டுப்பிரசுரங்கள் வீசப்பட்டிருந்த நிலையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வேட்பாளர் எஸ்.எல்.எம்.ஜிப்ரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணையை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.