குழியிலிருந்து பெறப்படும் நீரைப் பருகும் கிராமம்!

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு - படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள ஆனைகட்டியவெளி கிராம மக்கள் சுத்தமான குடிநீரின்றி பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுப்பதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

மிக நீண்ட காலமாக சுத்தமான குடிநீரின்றி தாம் பெரும் இன்னலுற்றுவருவதோடு, பல சுகாதாரப் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்து வருவதாகவும் ஆனைகட்டியவெளி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த கிராமத்தின் ஒரு பகுதிக்கு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டுள்ள போதும் ஏனைய பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட வில்லை என்றும் கூறியுள்ளனர்.

இதேவேளை, குழிகளிலிருந்து பெறப்படும் நீரைப் பருகுவதனால் வயிற்றுவலி, வாந்திபேதி போன்ற நோய்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்நிலையில் ஆனைகட்டியவெளி கிராமத்தின் ஒரு பகுதிக்கு தற்போது குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.

ஏனைய பகுதிக்கு இவ்வருடத்திற்குள் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக போரதீவுப்பற்றுப் பிரதேச அரச உத்தியோகஸ்த்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.