கிளிநொச்சியில் வைத்தியசாலைக்குச் சென்ற பாட்டி திரும்பி வரவே இல்லை

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி - மயில்வாகனபுரம் பகுதியிலிருந்து வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகச் சென்ற மூதாட்டி ஒருவர் காணாமல் போயுள்ளார்.

62 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணொருவரே காணாமல் போய் இருப்பதாக அவரது உறவினர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்பப்பட்டுள்ளது.

கிளிநொச்சி - பிரமந்தனாறு, மயில்வாகனபுரம் பகுதியில் வசித்து வந்த வடிவேல் பாக்கியம் (வயது 62) என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் மாதாந்த சிகிச்சைக்காக சென்றதாகவும் அவர் நேற்றுவரை வீடு திரும்பவில்லை எனவும் அவர்களது உறவினர்களால் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.