யாழில் இருந்து கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட கேரள கஞ்சா

Report Print Theesan in சமூகம்

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு கொண்டு செல்லப்பட்ட 8 கிலோ கேரள கஞ்சாவினை வவுனியா மத்திய நகரில் வைத்து கைப்பற்றி உள்ளதுடன், சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

கொழும்பை வசிப்பிடமாக கொண்ட 54 வயதுடைய நபர் ஒருவரே சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நாளைய தினம் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.