இவர்களின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஒரு வருடம்! தீர்வு எப்போது?

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் 355ஆவது நாளாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

சர்வதேசத்தின் வருகையே எமது உறவுகளின் வருகையை உறுதிப்படுத்தும் என்பதை வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியாவில் கடந்த வருடம் சிவராத்திரி தினத்தன்று சுழற்சி முறையிலான போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

இன்று சிவராத்திரி. குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஒருவருடமாகின்றது. அதனை நினைவுகூர்ந்து இன்று காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டத்தினை தொடர்ந்துள்ளனர்.