வவுனியாவில் வைத்தியருக்கு எதிராக மக்கள் குற்றச்சாட்டு

Report Print Theesan in சமூகம்

தாமதித்து சிகிச்சை வழங்கப்பட்ட மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வவுனியாவில் மாணவர் ஒருவர் விபத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவனுக்கு தாமதமாக சிகிச்சை வழங்கப்பட்டதே இந்த மரணத்துக்கு காரணம் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

இது தொடர்பாக ருத்து வெளியிட்டுள்ள அந்தப் பகுதி மக்கள்,

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் செல்லும் நோயளர்களிடம் பொது சத்திர சிகிச்சை வைத்திய நிபுணராக கடமையாற்றும் வைத்தியர் முறைகேடாக சில விடையங்களைச் செய்து வருகிறார்.

அரச வைத்தியசாலையில் சிகிச்சை அளிப்பதற்கு தனது மேற்பார்வையிலுள்ள தனியார் வைத்திய நிலையத்திற்கு நோயாளர்களை வரவழைக்கிறார்.

அங்கு செல்பவர்களிடம் அதிக பணம் அறவிடப்படுகிறது. இதனால் அவர்களை விஷேட கவனிப்புடன் அரச வைத்தியசாலையில் மீண்டும் நோயாளர்களை அனுமதித்து சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ளப்படுகின்றது.

இதேவேளை, அண்மையில் வவுனியாவில் மாணவர் ஒருவர் விபத்தில் காயமடைந்த நிலையில் iவத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் அவருக்கு தாமதித்து வைத்திய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக அம் மாணவன் உயிரிழந்துள்ளார். வைத்தியசாலையில் தனது செயற்பாடுகளை நீண்டகாலமாக இவ்வாறு மேற்கொண்டு வருதாகவும் தெரியவருகின்றது.

இந்த நிலையில் சிந்தாமணி ஆலய வீதியில் தனது வீட்டுடன் தனியார் சிகிச்சை நிலையத்தினை அமைத்துள்ளதுடன் மேலதிகமாக வருமானங்களைப் அதனூடாகப்பெற்று வருகின்றார்.

அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஒன்றரை இலட்சத்திற்கு அதிமாக ஊதியம் பெறும் வைத்தியர் ஒருவர் இவ்வாறு மேலதிகமாக தனியார் வைத்தியசாலையிலும் நோயாளர்களிடம் பணம் பெற்றுவருவது பொதுமக்களிடையே பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளர்களிடம் தனது தனியார் வைத்திய சிகிச்சை நிலையத்தின் முகவரியை வழங்கி அங்கு வந்து மேலதிக சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்து நோயாளர்களிடம் அதனை வழங்கி வருகின்றார்.

1000ரூபா வைத்தியருக்கு 800ரூபா தனியார் வைத்திய கிசிச்சை நிலையத்திற்கு வழங்கியதையடுத்து நீண்டகாலம் திகதியிடப்பட்ட சத்திர சிகிச்சை ஒன்றினை மிக குறுகிய காலத்திற்குள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றார்.

வைத்தியசாலையில் குறித்த வைத்தியரின் தவறு காரணமாக சில உயிரிழப்புக்கள் அண்மையில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இவ்வாறான வைத்தியரின் செயற்பாடுகளைப் பொதுமக்கள் சட்ட ரீதியில் முன்னெடுத்துச் செல்ல முடியும்.

வைத்தியரினால் வைத்தியசாலையில் நோயர்களுக்கு மருந்து எழுதி வழங்கப்படும் சிட்டையில் வைத்தியரின் தனியார் மருத்துவமனையின் முகவரியை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது சட்ட ரீதியில் தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வாறு சட்ட ரீதியாக வைத்தியருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளும் பட்சத்தில் வைத்தியரின் சேவை இடை நிறுத்தப்படுவதுடன் இடம்பெற்ற உயிரிழப்புக்களுக்கு நட்ட ஈடுகளும் பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளனர்.