காதலர் தினத்தில் இலங்கையில் மலர்ந்துள்ள ஆபத்தான மலர்கள்!

Report Print Vethu Vethu in சமூகம்

உலகளாவிய ரீதியில் நாளையதினம் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.

பெப்ரவரி மாதத்தில் வெலன்டைன் எனப்படும் மலர்கள் மலரும் காலமாகும்.

இந்த மலர் கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சியாக காணப்பட்டாலும் புற்றுநோயை ஏற்படுத்தும் ஆபத்தான மலர் என உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் இந்த மரங்களை வீட்டுத் தோட்டத்தில் வளர்த்தால் அது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகின்றது.

எனினும் இதன் ஆபத்தான நிலைமையை அறியாமல் சிலர் இன்னமும் இந்த மரத்தை பாதுகாப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்நிலையில் புத்தளம் ஆனமடுவ பிரதேசத்தில் இந்த வெலன்டைன் மரத்தின் மலர்கள் பெருமளவு மலர்ந்துள்ளன.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.