யாழில் சுவாசம் மட்டுமே சுடுகலனாய் நூலின் வெளியீட்டு விழா

Report Print Suky in சமூகம்

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா எழுதிய 'சுவாசம் மட்டும் சுடுகலனாய்' கவிதை நூலின் வெளியீட்டு விழா யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு நேற்று யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் யோ.புரட்சி தலைமையில் நடைப்பெற்றுள்ளது.

இதன்போது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் உரையாற்றியுள்ளார்.

வாழ்த்துரையினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜாவும் அறிமுகவுரையினை நிகழ்வின் சிறப்பு அதிதி ஊடகவியலாளர் யாழ் தர்மினி பத்மநாதனும் வழங்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து நூலின் முதற்பிரதியினை நூலாசிரியரின் புதல்வர்களான பரணிகன், சுகநிதா ஆகியோர் வெளியிட, தீர்கதரிசன காட்டூனிஸ்ட் அமரர் அஸ்வினின் தாயார் பற்றிக் அல்பேர்ட் திரேசாராணியும் அவரது புதல்வி அஸ்வின், சுதர்சன், லோஜனா ஆகியோர் பெற்றுக்கொண்டுள்ளனர்.

நூலின் ஆய்வுரையினை அறிவிப்பாளர் பிரியமதாவும் பிரதம அதிதி உரையினை, வெற்றிச்செல்வியும் ஆற்றியுள்ளதுடன், இறுதியில் ஏற்புரையுடன் கூடிய நன்றியுரையினை நூலாசிரியர் வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா வழங்கியுள்ளனர்.

மேலும், வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா 1993இல் அன்னை பூபதி நினைவு பொது அறிவுத் தேர்வில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.