எக்ஸ்ரே தொழில்நுட்பவியலாளர்கள் 15ம் திகதி முதல் வேலைநிறுத்தம்

Report Print Aasim in சமூகம்

அரசாங்க மருத்துவமனைகளில் பணியாற்றும் எக்ஸ்ரே தொழில்நுட்பவியலாளர்கள் எதிர்வரும் 15ம் திகதி தொடக்கம் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளவுள்ளனர்.

ஊழியர் பற்றாக்குறை மற்றும் மேலதிக வேலை நேர கொடுப்பனவு போன்றவற்றில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தரக் கோரிக்கை விடுத்து இவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் புதன்கிழமை தொடக்கம் எக்ஸ்ரே தொழில்நுட்பவியலாளர்கள் மருத்துவமனைகளின் வார்ட்டுகளில் தங்கியுள்ள நோயாளிகளுக்கான எக்ஸ்ரே செயற்பாடுகளை மேற்கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.

அத்துடன் 15ம் திகதி தொடக்கம் தொடர்வேலை நிறுத்தப் ​போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.