இலங்கை வருவாரா அர்ஜுன் மகேந்திரன்? முடிவடைகிறது கால அவகாசம்

Report Print Ajith Ajith in சமூகம்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் முடிவடைகின்றது.

மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணைமுறி விநியோக மோசடி தொடர்பில் அர்ஜுன் மகேந்திரன் சந்தேகத்திற்குரியவராக பெயரிடப்பட்டுள்ளார்.

இதையடுத்து, அவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு, கொழும்பு கோட்டை நீதிமன்றம் கடந்த 5ஆம் திகதி அழைப்பாணை பிறப்பித்திருந்தது.

இதற்கமைய, சிங்கப்பூரில் உள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருக்கு 10 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்த கால அவகாசம் நாளையுடன் முடிவுக்கு வருகிறது. எனினும் அவர் இலங்கைக்குத் திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.