இலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக ஆதிவாசிப் பெண் வெற்றி

Report Print Nesan Nesan in சமூகம்

இலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக ஆதிவாசிப் பெண் ஒருவர் அரசியலுக்குள் உள்நுழைந்துள்ளார்.

கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் போட்டியிட்ட பெண்ணொருவரே வெற்றி பெற்றுள்ளார்.

அம்பாறை மாவட்ட தெஹியத்தக் கண்டிய ​ஹேனாநிகல தெற்கு மற்றும் வடக்கில் போட்டியிட்ட 37 வயதான W.M.ஷிரோமாலா என்ற பெண்ணே வெற்றிப்பெற்று உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கல்வி பொதுதராதர சாதாரண தரம் வரை கல்வி பயின்றுள்ள இவர், 1369 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

தன்னுடைய மக்களுக்காகவும், அழிந்து செல்லும் தனது கலாச்சாரம் மற்றும் மதம் போன்ற விடயங்களில் அதிக கவனம் செலுத்தும் அதேவேளை நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் தேவையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதுடன், தான் எதிர்வருகின்ற மாகாண ச​பைத் தேர்தல் மற்றம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.