இலங்கையில் பெண் ஒருவரின் வாழ்க்கைக்காக கைதிகள் மனிதாபிமானம்!

Report Print Kamel Kamel in சமூகம்

தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் இணைந்து அப்பாவி குடும்பம் ஒன்றுக்கு வீடு ஒன்றை வழங்கியுள்ளனர்.

களுத்துறை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள், தமக்கான உணவு வேளையில் வழங்கப்படும் இறைச்சியை தவிர்த்து அந்தப் பணத்தைக் கொண்டு இந்த வீட்டை நிர்மானித்துள்ளனர்.

வடக்கு களுத்துறை புகையிரத வீதியில் வதியும் மானெல் சந்திரிக்கா மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளுக்கு சிறைச்சாலை திணைக்களத்தின் ஊடாக வீடொன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

மானெல் சந்திரிக்காவின் கணவர் புற்று நோயினால் இறந்து விட்டதாகவும் பிள்ளைகளுக்கு கல்வி கற்பிக்க மிகவும் சிரமப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வீட்டை நிர்மாணிக்கும் அனைத்து பணிகளையும் கைதிகளே மேற்கொண்டுள்ளனர்.

இந்த வீட்டு நிர்மாண பணியில் இணைந்து கொண்ட ஓர் கைதி தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படாத குடும்பம் ஒன்றிற்காக முதல் தடவையாக கைதிகளின் முயற்சினால் வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.