உடைக்கப்படும் வணக்க சிலைகள்: இந்து மக்கள் கண்டனம்

Report Print Ashik in சமூகம்

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இந்து மக்களின் வணக்க சிலைகள் உடைக்கப்பட்டு வரும் சம்பவத்திற்கு மன்னார் மாவட்ட இந்து மக்கள் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இன்று காலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரொன்றையும் கையளித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

சிவராத்திரி தினத்தில் மிலேச்சத்தனமாக ஆலய விக்கிரகங்களை உடைத்தும், களவாடிச் சென்றும் இந்து மக்களின் உணர்வை கொச்சைப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட நாசகார செயலை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இவ்வாறான செயற்பாடுகளை உடன் நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மன்னார் மாவட்டத்தில் மத ஒற்றுமையை கெடுக்கும் வகையில் இடம் பெருகின்ற குறித்த சம்பவங்களுக்கு பொலிஸாரும், உரிய அதிகாரிகளும் சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.