கிளிநொச்சி: வட்டக்கச்சில் இளம் தாய் மர்மமான முறையில் கொலை

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சி - வட்டக்கச்சி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று மதியம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வடக்கச்சி பத்துவிட்டுத்திட்டத்தைச் சேர்ந்த பாஸ்கரன் நிரோசா (வயது 24) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலைக்கான காரணம் தெரியவரவில்லை. கிராமத்தில் நடைபெறவுள்ள பூப்புனித நீராட்டு விழாவுக்கு அயலவர்கள் சென்றிருந்த போதே இக் கொலை இடம்பெற்றிருக்கிறது.

குறித்த பெண் வீட்டிற்கு பின்புறமாக இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இறந்த பெண்ணுக்கு ஏழு வயது மகன் மற்றும் ஒன்றரை வயது மகள் உள்ளனர்.

கணவர் தொழிலுக்குள் சென்றிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகள் இராமநாதபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சத்துரங்க தலைமையிலான குழுவினரும் கிளிநொச்சி குற்றத் தடவியல் பொலிசாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றார்.