வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் சென்ற வான் திடீரென தீப்பற்றியது

Report Print Thirumal Thirumal in சமூகம்

கண்டி - நுவரெலியா பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த வான் ஒன்று புஸ்ஸல்லாவ வகுகபிட்டிய பகுதியில் வைத்து திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று மாலை வேளையில் நடந்துள்ளதுடன், வான் சாரதி மற்றும், அதில் பயணித்தவர்கள் வானை விட்டு வெளியேறியதால் தீக்காயங்கள் இன்றி தப்பியுள்ளனர்.

கொழும்பிலிருந்து நுவரெலியா பகுதிக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வானே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, இந்த வானை பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து அணைத்துள்ளனர். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.