வவுனியாவில் தேசிய போக்குவரத்து நேரக்கணிப்பாளர் மீது தாக்குதல்

Report Print Theesan in சமூகம்

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இ.போ.ச ஊழியர்கள் 10 பேரடங்கிய குழுவொன்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நேரக்கணிப்பாளரை தாக்கிய சம்பவத்தில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், மதுபோதையில் வந்தவர்களே தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நேரக்கணிப்பாளரை நெருங்கிய இ.போ.ச ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் உதான சம்பத் எனும் 38 வயதான நபர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டுள்ளதுடன், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நேரக்கணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்று இரவு கைகலப்பில் ஈடுபட்ட எவரையும் இது வரையில் கைது செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.