சிறுமியை கூட்டுபாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சி! தப்பி ஓடிய சந்தேகநபர்கள்

Report Print T.Chandru in சமூகம்

இராகாலை - அள்கரநோயா தோட்டப் பகுதியில் சிறுமி ஒருவரை கூட்டு பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

நேற்று இரவு 18 வயது சிறுமி ஒருவரை கூட்டு பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த சிலர் முயன்றுள்ளனர்.

இதன்போது சிறுமி சத்தமிட்டதை தொடர்ந்து குறித்த சந்தேகநபர்கள் தப்பி ஒடியுள்ளனர்.

இதையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நால்வரை இன்று கைது செய்துள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு சந்தேகநபர்களை நுவரெலியா நீதவான் முன்னிலையில் அஜர்படுத்தபட உள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.