லசந்த கொலைச் சம்பவம்! முன்னாள் பொலிஸ் உயர் அதிகாரி விளக்கமறியலில்

Report Print Steephen Steephen in சமூகம்

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொலை சம்பவம் தொடர்பான விடயங்களை மூடி மறைத்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்தி வரும் குற்றப் புலனாய்வு திணைக்களம், முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரான பிரசன்ன நாணயக்காரவை நேற்றிரவு கைது செய்திருந்தது.

லசந்த விக்ரமதுங்கவின் கொலை சம்பவம் நடந்த நேரத்தில் கல்கிஸ்சை மற்றும் மேல் மாகாண தெற்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக பிரசன்ன நாணயக்கார கடமையாற்றி வந்தார்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால், கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்ட பிரசன்ன நாணயக்காரவை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் மொஹமட் மிஹாயில் உத்தரவிட்டுள்ளார்.