வன்முறையற்ற வாழ்வுக்கான காண்பியக் கலைக் காட்சி

Report Print Kumar in சமூகம்

பெண்களுக்கும், பூமித்தாய்க்கும் எதிரான வன்முறைகளற்ற வாழ்வை கொண்டாடுவோம் என்ற தொனிப்பொருளில் வன்முறையற்ற வாழ்வுக்கான காண்பியக் கலைப் படைப்பாளர்களின் காண்பியக் கலைக் காட்சி மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று கலை 9.00 மணியளவில் சத்துருக்கொண்டான் பிரதான வீதியின் திறந்த வெளிக்காட்சியாக நடைபெற்றுள்ளளது.

உலகிற்காக உலகெங்கும் நூறுகோடி மக்கள் எழுச்சி கொள்ளும் தினமாக பெப்ரவரி 14ஆம் திகதி நினைவு கொள்ளப்படுகின்றது.

இந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில் இந்த பூவுலகில் மூன்றில் ஒரு பெண் தனது வாழ்க்கைக் காலத்தில் வன்முறைக்குட்படுத்தப்படுகின்றாள்.

உலகின் சனத்தொகையாகிய அறுநூறு கோடியில் முன்னூறு கோடி பெண்களில் நூறுகோடி பெண்கள் வன்முறைக்குட்படுத்தப் படுகின்றார்கள்.

இது மிகவும் மோசமான நிலையாகும் , பெண்களுக்கும் ,அனைத்து மனிதர்களுக்கும் ,இயற்கைக்கும் எதிரான வன்முறைகள் இல்லாத உலகம் கொண்டாடப்பட வேண்டியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.