திருநீற்றுப்புதனை முன்னிட்டு மட்டக்களப்பில் விசேட திருப்பலி

Report Print Kumar in சமூகம்

உலகளாவிய ரீதியில் கிறிஸ்தவர்கள் இன்றையதினம் திருநீற்றுப்புதனை அனுஷ்டித்து வரும் நிலையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட திருப்பலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் மட்டக்களப்பு, புளியடிகுடா புனித செபஸ்தியார் ஆலயத்தில் இன்று திருநீற்றுப்புதன் சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அருட் தந்தை இயேசு சபை துறவி அருட்பணி லோரன்ஸ் அடிகளினால் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டுள்ளது.

இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகிய மூன்றையும் நினைவு கூரும் தவகாலத்தில் தொடர்ந்தும் 40 நாட்கள் ஆலயங்களில் வழிபாடுகள் இடம்பெறும்.

இதேவேளை, இந்த விசேட திருப்பலியில் பெருமளவிலான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.