யாழில் பட்டம் ஏற்றிய சிறுவனுக்கு நேர்ந்த கதி

Report Print Mohan Mohan in சமூகம்
149Shares

யாழ். சாவகச்சேரி, கல்வயல் பகுதியில் பட்டம் ஏற்றிய 16 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். சாவகச்சேரியை சேர்ந்த ஜெயக்குமாரன் தீசன் என்னும் சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் பட்டம் ஏற்றிக்கொண்டு பின்பக்கமாக ஓடிச்சென்ற போது கிணற்றில் விழுந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.