வழக்குத் தவணைகளுக்கு செல்லாது தலைமறைவாக இருந்து வந்த நபருக்கு விளக்கமறியல்

Report Print Mubarak in சமூகம்
47Shares

திருகோணமலை - மூதூர் பகுதியில் 2 பவுண் தங்க நகையை திருடிய நபரொருவர் வழக்குத் தவணைகளுக்கு செல்லாது தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு மூதூர் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் முன்னிலையில் நேற்றைய தினம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபரை அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மூதூர் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய நபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தலைமறைவாக இருந்த நிலையிலே குறித்த நபரை கடந்த 18ஆம் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.