அபுதாபி பாதுகாப்பு தடுப்பு முகாமிலுள்ள இலங்கையர்களை நேரில் சந்தித்த அமைச்சர் தலதா அத்துக்கோரள அவர்களுக்கு உதவுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன்படி அபுதாபி பாதுகாப்பு தடுப்பு முகாமிலுள்ள இலங்கையர்களை விரைவாக நாட்டிற்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை தூதரக அதிகாரிகளுக்கு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அபுதாபிக்கு விஜயம் செய்த நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள அபுதாபி முகாம்களில் தங்கியுள்ள இலங்கையர்களின் நலன்கள் தொடர்பான விடயங்களை நேரில் சென்று கண்டறிந்தார்.
இந்த முகாம்களில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டவர்கள் தங்கியுள்ளதாகவும் இவ்வாறானோரை விரைவாக நாட்டுக்கு அழைத்துவர ஏற்பாடு செய்யுமாறும் அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.