வவுனியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு வட மாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனின் அழைப்பின் பேரில் வைத்தியசாலைகளில் உள்ள குறைபாடுகளை அறிந்து கொள்வதற்காக நேற்றைய தினம் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, சுகாதார அமைச்சர் பூவரசன்குளம் பிரதேச வைத்தியசாலை, முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் பராமரிப்பு நிலையமான வைகறை, ஸ்ரீராமபுரம் வைத்தியசாலை, சிதம்பரபுரம் பிரதேச வைத்தியசாலை, நெடுங்கேணி வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளுக்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.
இதேவேளை, வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனும் கலந்து கொண்டதுடன், வைத்தியசாலை அபிவிருத்திக் குழுக்களுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.