ஆபத்திலிருந்து உயிர் தப்பிய இலங்கையரின் கோரிக்கை! கண்டுகொள்ளாத இந்திய பொலிஸ்

Report Print Shalini in சமூகம்
298Shares

இந்தியாவிலுள்ள இலங்கை மீனவரை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் முருகன் கோயில் 7ஆம் வட்டத்தைச் சேர்ந்த மீனவர்களான மரியதாஸ் மற்றும் என்டன் ஆகிய இருவரும் கடந்த டிசம்பர் மாதம் மீன்பிடிக்கச் சென்ற போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் என்டன் கடலில் மூழ்கி காணாமல் போன நிலையில், கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மரியதாஸை ராமேஸ்வரம் மீனவர்கள் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதையடுத்து கடலோர பாதுகாப்புக் குழு பொலிஸார் மரியதாஸை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

இதன்போது, இலங்கை மீனவர் மரியதாஸை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நீதிபதி உத்தரவிட்ட நிலையில் கடந்த 2 மாதங்களாகியும் அதற்கான முயற்சியினை இந்திய பொலிஸார் எடுக்கவில்லை.

இதனால் குறித்த நபர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதி முகாமில் வசித்து வரும் சகோதரி வீட்டில் தங்கியுள்ளதோடு, தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய - இலங்கை நிரபராதி மீனவர் கூட்டமைப்பின் தமிழக பிரதிநிதி அருளானந்தம் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.