யாழ். மயிலிட்டி துறைமுகத்திற்காக நிதி வழங்கியுள்ள நோர்வே அரசு

Report Print Sumi in சமூகம்
115Shares

யாழ். மயிலிட்டி துறைமுகத்தை நவீனமுறையில் அபிவிருத்தி செய்ய நோர்வே அரசு சுமார் ஒரு மில்லியன் டொலர் நிதியை வழங்கியுள்ளது.

இந்த தகவலை அந்த நாட்டின் இலங்கைக்கான உதவி உயர்ஸ்தானிகர் மொனிக்கா ஸ்வென்ஸ்கெட் தெரிவித்துள்ளார்.

நோர்வே அரசின் நிதிப்பங்களிப்பில் யாழ். காங்கேசன்துறை தெற்கு பளை வீமன்காமம் பகுதியில் சுமார் அறுபது இலட்சம் ரூபா செலவில் பல்நோக்கு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பல்நோக்கு மண்டபத்தினை நோர்வே நாட்டின் இலங்கைக்கான உதவி உயர்ஸ்தானிகர் மொனிக்கா ஸ்வென்ஸ்கெட் இன்று (20) சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்துள்ளார்.

இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவசிறி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே நோர்வே நாட்டின் இலங்கைக்கான உதவி உயர்ஸ்தானிகர் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

மயிலிட்டி துறைமுக புனரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மக்களின் மீள்குடியேற்றத்தில் பாரிய பங்களிப்பை வழங்கி வரும் நோர்வே தொடர்ந்து அந்த திட்டங்களை முன்னெடுக்கும்.

அத்துடன், மயிலிட்டி துறைமுகத்தை நவீனமுறையில் அபிவிருத்தி செய்யும் பொருட்டு நோர்வே அரசு சுமார் ஒரு மில்லியன் டொலர் நிதியை ஒதுக்கியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.