போதை பொருளுடன் சிவனொளிபாதமலை சென்ற 27 பேருக்கு நீதிபதி வழங்கிய உத்தரவு

Report Print Gokulan Gokulan in சமூகம்
40Shares

சிவனொளிபாதமலைக்கு போதை பொருளுடன் சென்ற சந்தேகநபர் 27 பேருக்கும் 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்களை ஹட்டன் மாவட்ட நீதிமன்ற நீதவான் டி சரவனராஜா முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தியபோதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கடந்த 17ஆம் திகதி கஞ்சா மற்றும் ஹெரோயின் போதை பொருளுடன் வந்த இளைஞர்கள் ஹட்டன் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் பொலிஸ் மோப்பநாயின் உதவியுடன் கைது செய்யப்பட்டனர்.

தியகல சோதணை சாவடியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே கம்பஹா, கொழும்பு, குருணாகல் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த இளைஞர்களே கைது செய்யப்பட்டதாக தெரியவருகின்றது.

மேலும் இவர் குற்றத்தை ஏற்றுக்கொண்ட நிலையிலே 1லட்சத்து 35 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.