கினிகத்தேனையில் கார் ஒன்று 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

Report Print Gokulan Gokulan in சமூகம்
62Shares

ஹட்டன், கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேன பகுதியில் கார் ஒன்று 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று காலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கினிகத்தேன ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் அதிகாரியொருவர் இ.போ.ச பேருந்து வண்டியில் கடிதமொன்றை வழங்க காரில் பின் தொடர்ந்து சென்றபோதே பாதையை விட்டு விலகி குறித்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும், சம்பத்தில் உயிர் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என கினிகத்தேனை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.