மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 15 பேர் அகில இலங்கை சமாதான நீதிவான்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் நடைபெற்றது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரமின் சிபாரிசுக்கு அமைவாக நீதி அமைச்சினால் இந்த சமாதான நீதிவான்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சமூகத்தில் உள்ள சிறந்த சமூக சேவையாளர்களை இனங்கண்டு அவர்களை கௌரவிக்கும் வகையில் இவ்வாறான சமாதான நீதவான்கள் நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 15பேர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, யோகநாதன் ரஜனி, கோவிந்தபிள்ளை பாலகிருஸ்ணன்,சிதம்பரப்பிள்ளை செல்வராஜா,பிரேமராஜா பிரமிதன், சாமித்தம்பி கிருசா,தங்கராஜா இன்பராஜா, குணரெட்னம் தயாபரன், நேசதுரை ஜெயகாந்தன், குமாரசாமி கதாகர், அமரசிங்கம் கருணாகரன், ஆறுமுகம் பகீரதன், சித்திரவேல் விஸ்ணுராஜா, மாசிலாமணி வன்னியசிங்கம், பாக்கியராஜா கோபிநாதன், அழகிப்போடி குலேந்திரராஜா ஆகியோர் அகில இலங்கை சமாதான நீதிவான்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.