அதிபர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி தற்காலிகமாக இடைநிறுத்தம்

Report Print Aasim in சமூகம்

பாடசாலை அதிபர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

குருநாகல் மாவட்டத்தின் வாரியப்பொலையில் அண்மையில் நடைபெற்ற அதிபர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியின் போது ஹம்பாந்தோட்டை மாவட்டப் பாடசாலை ஒன்றின் பெண் அதிபர் திடீர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

குறித்த அதிபரின் மரணம் தொடர்பில் அமைச்சு மட்டத்திலான விசாரணைகளை முன்னெடுக்க கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாரச்சிக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த விசாரணைகள் நிறைவடையும் வரை அதிபர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறும் அமைச்சர் அகில விராஜ் உத்தரவிட்டுள்ளார்.