இராணுவமும் மக்களும் பயணித்த பேருத்தில் வெடிப்பு! பலர் கவலைக்கிடம்?

Report Print Jeslin Jeslin in சமூகம்
1773Shares

தியத்தலாவ - கஹகொல்ல பகுதியில் பேருந்து ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தால் 19 பேர் காயமடைந்துள்ளதுடன் அதில் 11 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தியத்தலாவ - கஹகொல்ல எனும் இடத்தில் இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

7 இராணுவத்தினர் மற்றும் 5 விமானப் படையினர் உள்ளடங்களாக 12 படையினர் உட்பட 7 பொதுமக்கள் உட்பட 19 பேரே இதில் காயமடைந்துள்ளனர்.

குறித்த பேருந்து, பண்டாரவளையிலிருந்து தியத்தலாவை நோக்கி மக்களையும், இராணுவத்தினரையும் ஏற்றிக்கொண்டு ஹெபராவை - கிராந்துருகோட்டை என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்த போதே குறித்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

மேலும், யாழ்ப்பாணத்தில் இருந்து தியத்தலாவைக்கு வந்த இராணுவத்தினரும் குறித்த பேருந்தில் பயணித்துள்ளனர்.

இதன்போது, பேருந்தின் சாரதிக்கு பின்னாலுள்ள 3 ஆவது ஆசனத்தில் ஏற்பட்ட புகையுடன் வெடிப்பே பேருந்தில் தீ பரவியதற்கு காரணம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதில் குறித்த பேருந்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

மேலதிக செய்திகள், புகைப்படங்கள் மற்றும் காணொளி - திருமாள்