சித்திரவதை செய்த கணவனுக்கு மனைவி கொடுத்த தண்டனை

Report Print Vethu Vethu in சமூகம்
441Shares

புத்தல பிரதேசத்தில் சித்திரவதை செய்த கணவனை கடுமையாக தாக்கிய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது மனைவியின் தாக்குதலுக்குள்ளான கணவர் பொலிஸ் விசாரணையின் போது உண்மை தகவலை மறைத்துள்ளார். சைக்கிளில் இருந்து விழுந்ததாக பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

எனினும் இதன் உண்மை தகவலை அறிந்து கொண்ட பொலிஸார் மனைவியை கைது செய்துள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான நபர் குடிபோதைக்கு அடிமையாகிய ஒருவராகும். குடிபோதையில் வீட்டிற்கு செல்லும் நபர், மனைவியை கொடுமைப்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

தொடர்ந்து சித்திரவதைகளை அனுபவித்து வந்த மனைவி, பொறுமையை இழந்த நிலையில் கணவனை கடுமையாக தாக்கியுள்ளார்.

வழக்கம் போன்று குடிபோதையில் வந்த குறித்த நபர் மனைவியை சித்திரவதை செய்துள்ளார்.

இதன் போது ஆத்திரமடைந்த மனைவி கணவனின் பாதங்களுக்கு கடுமைான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளார். காயமடைந்த கணவர் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு்ளார்.

பொலிஸ் விசாரணையின் போது சைக்கிளில் இருந்து விழுந்து காயமடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.