வீட்டிற்குள் புகுவதற்கு முற்பட்ட முதலை: மடக்கிப் பிடித்த இளைஞர்கள்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா - திருநாவற்குளம் பகுதியிலுள்ள வீட்டிற்குள் புகுவதற்கு முற்பட்ட முதலையொன்று மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ள நிலையில், அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் முதலையை பிடித்துள்ளனர்.

அந்த முதலையானது 5.5 அடி நீளமானது என தெரிவிக்கப்படுகிறது. பிடிக்கப்பட்ட முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனால் பாரிய அனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதுடன், அண்மைக்காலமாக வவுனியாவில் நிலவிவரும் வறட்சியால் குளங்களில் உள்ள நீர் வற்றியுள்ள நிலையிலேயே இவ்வாறான சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.