கிழக்கு மாகாணத்தில் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

Report Print Navoj in சமூகம்

கிழக்கு மாகாண சுற்றுலா நட்சத்திர விடுதிகள் சங்கத்தினால் நடத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி வாழைச்சேனை பிரதேசசபை மைதானத்தில் நேற்று முழு நேர போட்டியாக இடம்பெற்றுள்ளது.

இந்த போட்டி கிழக்கு மாகாண சுற்றுலா நட்சத்திர விடுதிகள் சங்கத்தின் தலைவர் றொசான் செல்வராஜ் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கிரிக்கெட் போட்டியில் பாசிக்குடா சுற்றுலாத்துறை முகாமையாளர் எஸ்.மாஹுர் மற்றும் நட்சத்திர விடுதிகள் முகாமையாளர்கள், ஊழியர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

கிழக்கு மாகாண சுற்றுலா நட்சத்திர விடுதிகள் சங்கத்தினால் 4ஆவது தடவையாக கிழக்கு மாகாணத்திலுள்ள 11 சுற்றுலா நட்சத்திர விடுதிகளுக்கு இடையில் 5 ஓவர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியானது நடத்தப்பட்டுள்ளது.

11 நட்சத்திர விடுதிகள் போட்டியிட்டு விளையாடியதில் பாசிக்குடா அமாயா வீச் மற்றும் பாசிக்குடா அனந்தயா ஹோட்டல் இறுதிச் சுற்றுப் போட்டிக்கு தெரிவாகியது.

இதன்போது அமாயா வீச் 2 விக்கட் இழப்புக்கு 74 ஓட்டங்களையும், பாசிக்குடா அனந்தயா ஹோட்டல் 8 விக்கட் இழப்புக்கு 28 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டது. இதில் பாசிக்குடா அமாயா வீச் இம்முறைக்கான சம்பியன் கிண்ணத்தை பெற்றுக் கொண்டது.

போட்டியில் வெற்றி பெற்ற நட்சத்திர விடுதிகள் மற்றும் சிறந்த வீரர்களுக்கான வெற்றிக் கேடயம் மற்றும் பணப் பரிசில்கள் கலந்து கொண்ட அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.