யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புறக்கோட்டையில் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

கொழும்பு - புறக்கோட்டை பகுதியில் கொக்கேய்ன் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரிடம் இருந்து 100 கிராம் கொக்கேய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - இளவாலை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, சந்தேகநபர் இன்றைய தினம் மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.