பேருந்தில் வெடிப்பு: தீவிரவாத செயற்பாடு அல்ல

Report Print Ajith Ajith in சமூகம்

தியத்தலாவையில் பயணிகள் பேருந்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தீவிரவாத செயற்படு அல்ல எனத் தாம் நம்புவதாக இராணுவ ஊடகப் பேச்சாளரான பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

தியத்தலாவை - கஹாகொல்ல பகுதியில் தனியார் பயணிகள் பேருந்து ஒன்றில் இன்று அதிகாலை 5.40 மணியளவில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 19 பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்களில் 7 இராணுவத்தினர் மற்றும் 5 விமானப் படையினர் உள்ளடங்களாக 12 படையினர் உட்பட 7 பொதுமக்கள் உட்பட 19 பேரே காயமடைந்துள்ளனர்.

தீப்பரவல் மற்றும் வெடிப்பு என்பன காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாரும், இராணுவத்தினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.