மலையகத்தில் காணப்படும் 31 பாடசாலைகளை இந்திய நிதியுதவியைக் கொண்டு அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக 395 மில்லியன் ரூபாவை வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
குறித்த நிதியில் இருந்து 95 மில்லியன் ரூபா புஸ்ஸல்லாவை சரஸ்வதி வித்தியாலய அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மலையகத்தின் மிகப் பழைமையான பாடசாலையாக கணிக்கப்படும் இப்பாடசாலையின் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கான கேள்வி மனுக்கள் தற்போதைக்கு கோரப்பட்டுள்ளன.
ஏனைய 30 பாடசாலைகளின் அபிவிருத்திப் பணிகளும் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.