தியத்தலாவ - கஹகொல்ல பகுதியில் பேருந்து ஒன்றில் ஏற்பட்ட வெடிப்புக்கான காரணம் வெளியாகி உள்ளது.
இதில் கைக்குண்டு ஒன்று வெடித்ததன் காரணமாகவே இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க பகுப்பாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
பேருந்து வெடிப்பு நடைபெற்ற இடத்துக்கு வருகை தந்த பகுப்பாய்வு அதிகாரிகள் கைகுண்டு ஒன்று வெடித்துள்ளதன் காரணமாகவே வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கண்டறிந்துள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் பணியாற்றி விடுமுறையில் திரும்பிய இராணுவத்தினரில் யாரேனும் ஒருவர் பாதுகாப்பற்ற முறையில் குறித்த கைக்குண்டை எடுத்து வந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.
மேலும், பகுப்பாய்வாளர்களின் விசாரணைகளுக்கு மேலதிகமாக இச்சம்பவம் குறித்து, பண்டாரவளை மற்றும் தியத்தலாவை பொலிஸார் தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.