காணாமல் போனவர்களுக்கான போராட்டம் தொடர்பில் அரசு அலட்சியம்?

Report Print Aasim in சமூகம்

காணாமல் போன தமது உறவினர்களைத் தேடிக் கண்டுபிடித்துத் தருமாறு வடக்கில் மேற்கொள்ளப்படும் தொடர் போராட்டம் குறித்து அரசாங்கம் அலட்சியம் காட்டுவதாக விமர்சிக்கப்படுகின்றது

யுத்தத்தின்போது, காணாமல் ​போனவர்களின் உறவினர்கள் தங்கள் உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு தொடர் சத்தியாக்கிரக போராட்டமொன்றை நடத்தி வருகின்றனர்.

காணாமல் போன உறவுகளை கண்டுபிடித்தருமாறும் அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியத்தருமாறும் போராட்டக்காரர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

கிளிநொச்சி கந்தசாமி கோயில் அருகே நடைபெற்று வரும் இப்போராட்டம் 366 நாட்களைத் தாண்டியுள்ள நிலையிலும் போராட்டக்காரர்களின் கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் அலட்சியத்துடன் நடந்து கொள்ளத் தலைப்படுகின்றது.

இது தொடர்பாக அரசாங்கத்தின் உயர்மட்டத்தினருடன் பல்வேறு பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் எதுவித பலனும் கிடைக்கவில்லை என்று போராட்டக்காரர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.