இடமாற்றப்பட்ட பொது வைத்திய நிபுணரை மீண்டும் நியமிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Report Print Rusath in சமூகம்

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட பொது வைத்திய நிபுணரை மீண்டும் பெற்றுத்தரக்கோரி இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பௌதீக வள குறைபாடுகளுக்கு மத்தியில் வைத்தியர்களின் பற்றாக்குறையுடனும் இயங்கி வரும் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஏற்கனவே கடமையில் இருந்து வந்த பொது வைத்திய நிபுணர் கடந்த திங்கட்கிழமை முதல் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதனால் வைத்தியர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு வைத்திய சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கருதியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக பதிலீடு செய்யப்பட்டு பொது வைத்திய நிபுணர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் தற்போதிருக்கும் வைத்திய அத்தியட்சகரை இடம்மாற்றுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.