மகனின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தந்தை செய்த செயல்

Report Print Steephen Steephen in சமூகம்
276Shares

உயிரிழந்த தனது 10 வயது மகனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மனைவி இடமளிக்காதமைக்கு எதிர்ப்பு தெரிவித்து 47 வயதான நபர் வீட்டுக்கு அருகில் உள்ள மரத்தில் ஏறி இன்று எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளார்.

அநுராதபுரம் - திறப்பனை, புஞ்சிகுளம் பிரதேசத்தில் வீட்டுக்கு அருகில் உள்ள மரத்தில் ஏறிய இந்த நபர் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளார்.

ருவான்வெல்ல பிரதேசத்தில் வசித்து வரும் 47 வயதான துஷார ஆரியசிங்க என்பவரே தனது மகனின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இவ்வாறனதொரு செயலில் ஈடுபட்டுள்ளார்.

எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள நபர், திறப்பனைப புஞ்சிகுளம் பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரை திருமணம் செய்திருந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் தனது மனைவி மற்றும் பிள்ளையை பிரிந்து, ருவான்வெல்ல பிரதேசத்தில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து அங்கேயே வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், முதல் மனைவிக்கு பிறந்த ஆண் பிள்ளை காய்ச்சல் நோய் காரணமாக ஆபத்தான நிலையில், அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளது.

சம்பவம் குறித்து கேள்விப்பட்ட தந்தை, பிள்ளையின் உடலை காண திறப்பனை, புஞ்சிகுளம் பிரதேசத்தில் உள்ள வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் மகனின் உடலை காண மனைவி இடமளிக்காத காரணத்தினால், மரத்தில் ஏறி எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.