ஹட்டன் ஹைலண்ஸ் பாடசாலையின் வளாகப்பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களினால் தீ வைப்பு

Report Print Thirumal Thirumal in சமூகம்

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட ஹட்டன் ஹைலண்ஸ் ஆரம்ப பிரிவு பாடசாலையின் வளாகப்பகுதியில் தேயிலை மலையும், மானாபுல்லும் காணப்பட்ட காணி திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பாடசாலைக்கு இ.தொ.காவின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானால் பெற்று கொடுக்கபட்ட சுமார் 200 ஏக்கர் காணிக்கே இவ்வாறு இனந்தெரியாத அடையாளம் தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, ஹட்டன் டிக்கோயா நகரசபையின் தீயணைப்பு பிரிவினர் கடும் முயற்சிக்கு மத்தியில் தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.