மட்டக்களப்பு - ஊறணி பகுதி வீடு ஒன்றில் தனிமையில் இருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை அறுத்துச் சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் நேற்று முன்தினம் வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த இரண்டு பவுன் தங்க சங்கிலியை பிய்த்துக் கொண்டு சென்றதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இதனடிப்படையில் வவுணதீவு, மகிழவட்டவான் பகுதியை சேர்ந்த சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் இருந்து தங்க சங்கிலியை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.