டிரான் அலஸுக்கு எதிரான வழக்கை விசாரிக்க நீதிமன்றம் தீர்மானம்

Report Print Aasim in சமூகம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸுக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

சுனாமி அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வீடுகளை அமைப்பதற்காக திறைசேரியில் இருந்து வழங்கப்பட்ட 200 மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் உள்ளிட்ட நான்கு பேர் மீது குறித்த சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தங்களுக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று டிரான் அலஸ் தரப்பினர் மேற்கொண்டிருந்த மேன்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு எதிரான வழக்கை விசாரிப்பதற்கான திகதியை நிர்ணயிக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 23ம் திகதி அதற்காக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு டிரான் அலஸ் உள்ளிட்டவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.