லசந்த கொலை வழக்கு : 3 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பொலிஸ் அதிகாரி

Report Print Steephen Steephen in சமூகம்

கல்கிஸ்சை பிரிவுக்கான முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமந்த, இன்று கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் மூன்று மணிநேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

சன்டே லீடர் பத்திரிக்கையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை சம்பவம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த அதிகாரிக்கு எதிரிலேயே, கல்கிஸ்சை பிரிவுக்கு பொறுப்பான முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கோரிக்கைக்கு அமைய லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணை குறிப்புகளை பொலிஸ் குறிப்பேட்டில் இருந்து அகற்றிய பின்னர், குறிப்பேடு கையளிக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.

நீதவான் முன்னிலையில், தனக்கு வாக்குமூலம் ஒன்றை வழங்க வேண்டும் என்று ஹேமாந்த அதிகாரி, கடந்த 16 ஆம் திகதி கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு அமைய இன்று நீதவானின் அறையில் மூன்று மணி நேரம் அவர் வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.