11 முன்னாள் போராளிகள் உட்பட யாழ்ப்பாணத்தில் உள்ள சுமார் 50 தமிழ் இளைஞர்கள் இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.
அவர்கள் இராணுவத்தின் தொண்டர் படையினராக செயற்பட உள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
குறித்த தமிழ் இளைஞர்கள் இராணுவ சீருடையை அணிய மாட்டார்கள் என்றும், எனினும் அவர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட ஏனைய சலுகைகள் கிடைக்கும் என்றும் இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினரால் முன்னெடுப்படும் விவசாய நடவடிக்கைகளுக்காக அவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், எதிர்காலத்தில் மேலும் தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என இராணுவ ஊடகப் பேச்சாளரை மேற்கோள்காட்டி ப்ரஸ் ட்ரஸ்ட் ஒவ் இந்தியா (Press Trust of India) செய்தி வெளியிட்டுள்ளது.