சட்டவிரோதமான முறையில் ஆடுகளை கடத்திய இருவர் கைது

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலிருந்து களுவாஞ்சிகுடி பிரதேசத்தை நோக்கி சட்டவிரோதமான முறையில் கொண்டு சென்ற 15 ஆடுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த ஆடுகளை இன்று மாலை வெல்லாவெளி பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வெல்லாவெளி பிரதேசத்திலிருந்து வட்டா ரக வாகனத்தில் சட்டவிரோதமான முறையில் ஆடுகளை ஏற்றிக் கொண்டு செல்வது தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் விரைந்து செயற்பட்டுள்ளனர்.

இதன்போது, 15 ஆடுகளையும் அவற்றை ஏற்றிக் கொண்டு சென்ற வட்டா ரக வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.